அமெரிக்காவின் சிலிகான் பள்ளத்தாக்கில் துவங்கியுள்ள நமோ டீக்கடை
சென்னை, பிப்.12-
நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்காக பா.ஜ.சார்பில் பிரதமர் பதவிக்கு முன்நிறுத்தப்பட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை காங்கிரஸ் கட்சி உறுப்பினரான மணி சங்கர் ஐயர் டீ விற்பனையாளர் என்று குறிப்பிட்டது பரபரப்பான தேர்தல் பிரச்சார உத்தியாக மாறிவிட்டது.
பாரதீய ஜனதா கட்சி உறுப்பினர்கள் நாடெங்கும் நமோ டீக்கடைகளை ஆரம்பித்து தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ளனர். இந்த அரசியல் தாக்கம் தற்போது அமெரிக்காவின் சிலிகான் பள்ளத்தாக்கிலும் ஒரு டீக்கடையைத் திறந்துள்ளது.
மைக்ரோசாப்ட், சிஸ்கோ, ஆப்பிள், ஈபே மற்றும் ஆரக்கிள் போன்ற பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணி புரியும் 60க்கும் மேற்பட்ட தொழில்துறை வல்லுனர்கள் ஒன்று கூடி இந்த டீக்கடையை ஆரம்பித்துள்ளனர். இந்தியாவில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் பதவி வேட்பாளரான நரேந்திர மோடிக்கு தங்களின் ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் அவர்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். சன்னிவேல் பகுதியில் உள்ள ஒர்டேகா பூங்காவில் உள்ள இந்த டீக்கடையில் இணையும் இவர்கள் அனைவரும் 'ஐ கேர் பார் இந்தியா' என்ற குழுவின் தன்னார்வ உறுப்பினர்கள் என்று பத்திரிகை செய்தி தெரிவிக்கின்றது.
கிராமத்தின் பாரம்பரிய டீக்கடை போல் அமைக்கப்பட்டுள்ள இங்கு கூடும் இவர்கள் இந்திய ஆட்சி அமைப்பில் உள்ள பிரச்சினைகளைத் தொழில்நுட்பத் துணை கொண்டு தீர்ப்பது குறித்த ஆலோசனையில் ஈடுபடுகின்றனர். இந்திய அதிகாரப் பரிமாற்றத்தில் ஏற்படும் இழப்பை சமீபத்திய தொழில்நுட்பம் கொண்டு குறைத்தல், அரசு டெண்டர் முறைகளை முழுமையாக கம்ப்யூட்டர் மயமாக்கல் மற்றும் இந்திய விவசாயிகளுக்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்குதல் போன்ற ஆலோசனைகளை இவர்கள் வழங்குகின்றனர். இந்த ஆலோசனைகள் தொகுக்கப்பட்டு இந்தியாவில் பா.ஜ.கட்சியினால் அமைக்கப்பட்டுள்ள குழு ஒன்றிற்கு அனுப்பப்படும் என்று இந்த டீக்கடையின் அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
source maalaimalar