சென்னை, பிப்.14-
நிதித்துறை முதன்மை செயலாளர் கே.சண்முகம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மாநிலத்தில் தற்போது வருவாயில் கடினமான போக்கு இருந்தாலும், 2014-2015-ம் ஆண்டின் வரவு செலவு திட்ட மதிப்பீடுகள் மாநிலத்தின் நிதி நிலையை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இதன்படி 2014-2015-ம் ஆண்டு வருவாய் ரூ.1 லட்சத்து 27 ஆயிரத்து 389 கோடியாக கணக்கிடப்பட்டு உள்ளது. வருவாய் செலவினமாக ரூ.1 லட்சத்து 27 ஆயிரத்து 100 கோடி என்று கணக்கிடப்பட்டு உள்ளது. உபரி ரூ.289 கோடி என்றும் கணக்கிடப்பட்டு உள்ளது.
பொதுக்கடன் வரவுகள் ரூ.31 ஆயிரம் கோடியும், பொதுக்கடன் திருப்பிச் செலுத்துதல் ரூ.7 ஆயிரத்து 499 கோடியுமாக உள்ளது. கடன்கள், முன்பணங்கள் உட்பட பொதுக்கடன் நீங்கலான மூலதனச் செலவுகள் ரூ.26 ஆயிரம் கோடியாக இருக்கும். மாநிலத்தின் முக்கிய துறைகளான சமூகநல திட்டங்களுக்கு 37 சதவிகிதம் பணம் செலவிடப்பட உள்ளது.
தொடர்ந்து தொழில்துறையை மேம்படுத்துவதற்காக சிறு, குறு தொழில் நிறுவனங்களை மேம்படுத்துவதற்கும் போதிய நிதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக சாலைகள் அமைப்பதற்கும் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. மின்சார தட்டுப்பாட்டை போக்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது.
குறிப்பாக 2013-14-ம் ஆண்டு மின்மானியமாக ரூ.4,970 கோடி வழங்கப்பட்டது. இதுதவிர பங்கு மூலதன உதவியாக ரூ.2,153 கோடி வழங்கப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து 2014-15-ம் ஆண்டு பட்ஜெட்டிலும் ரூ.5,400 கோடியும், மூலதன உதவியாக ரூ.2 ஆயிரம் கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ரூ.6,353 கோடி அளவிலான கடன் தொகையில் கடந்த ஆண்டு ரூ.ஆயிரம் கோடியை அரசு ஏற்றுள்ளது.
நடப்பாண்டு மேலும் ரூ.2 ஆயிரம் கோடி அரசால் ஏற்றுக் கொள்ளப்படும். எஞ்சிய கடன் தொகையை வரும் ஆண்டுகளில் அரசு ஏற்றுக் கொள்ளும். சென்னை மாநகர பஸ்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தும் புதிய திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதேபோல் கூவம் மேம்படுத்துவதற்காக நிதியும், மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் வழங்கப்படும் ரூ.ஆயிரத்திற்கு பதிலாக ரூ.1,500 வழங்கப்பட உள்ளது.
2014-15-ம் ஆண்டின் மாநில அரசு வாங்க அனுமதிக்கப்பட்ட கடன் அளவு ரூ.28 ஆயிரத்து 267 கோடியாகும். இருப்பினும் அரசு கடன் வாங்குவதை குறைக்க உத்தேசித்துள்ளது. மாநில அரசு தொகுதி நிதியில் நிகர கடன் வாங்குதல் ரூ.25 ஆயிரம் கோடியாக மட்டுமே மதிப்பிடப்பட்டுள்ளது. 31-03-2015 அன்று வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட ஏனைய கடன் ரூ.1 லட்சத்து 78 ஆயிரத்து 170 கோடியாக இருக்கும். இது மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 18.91 சதவிதமாகும்.
இதன் மூலம் கடன் வாங்குதல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், கடன் எல்லையையும் தாண்டவில்லை. உணவு பொருட்கள், மின்சாரம், போக்குவரத்து போன்றவற்றிற்கு மானியமும் வழங்கப்பட்டு வருகிறது.
டாஸ்மாக் மூலம் 2013-14-ம் ஆண்டு ரூ.23 ஆயிரத்து 401 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டன. இதில் விற்பனை வரியாக ரூ.17 ஆயிரத்து 533, கலால் வரியாக ரூ.5,868 கோடியாகும். 2014-15-ம் ஆண்டு டாஸ்மாக் மதுபான விற்பனை ரூ.26 ஆயிரத்து 295 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ரூ.19 ஆயிரத்து 812 கோடி விற்பனை வரியும், ரூ.6,483 கோடி கலால் வரியும் செலுத்த வேண்டிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
உடன் வருவாய்துறை உயர் அதிகாரிகள் உதயசந்திரன், பிரசாந்த் வடநரே, வெங்கடேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

source maalaimalar