Home
» politics
» காங்கிரஸ் விருப்பமனு பரிசீலனைக்கு வராதவர்களுக்கு இ-மெயில் மூலம் பட்டியல்: ஞானதேசிகன் பேட்டி
காங்கிரஸ் விருப்பமனு பரிசீலனைக்கு வராதவர்களுக்கு இ-மெயில் மூலம் பட்டியல்: ஞானதேசிகன் பேட்டி
சென்னை, பிப்.14-
காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுவதற்கு கொடுக்கப்பட்ட விருப்பமனுவை பரிசீலனை செய்ய வராத கமிட்டி உறுப்பினர்களுக்கு இ-மெயில் மூலம் பட்டியல் அனுப்பப்பட்டுள்ளதாக ஞானதேசிகன் கூறினார். காங்கிரஸ் கட்சி சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமனு செய்தவர்களின் மனுக்கள் 2-வது நாளாக நேற்றும் பரிசீலிக்கப்பட்டது.
இதில் குழு உறுப்பினர்களான தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் ஞானதேசிகன், முன்னாள் தலைவர்கள் குமரி அனந்தன், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், கிருஷ்ணசாமி மற்றும் யசோதா, தனுஷ்கோடி ஆதித்தன் உள்பட பலர் பங்கேற்றனர்.
காங்கிரஸ் கட்சி சார்பில் மத்தியமந்திரி ஜி.கே.வாசன் மயிலாடுதுறையிலும், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஈரோடு, ப.சிதம்பரத்திற்கு சிவகங்கை தொகுதியிலும், முன்னாள் மத்தியமந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் திருநெல்வேலி தொகுதியிலும் போட்டியிடுவதற்கு வாய்ப்பு கேட்டு உள்ளனர்.
முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு உள்பட குழுவில் இடம் பெற்ற சிலர் கலந்து கொள்ளவில்லை. இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் ஞானதேசிகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பாராளுமன்ற கூட்டம் நடப்பதால் மத்தியமந்திரிகள், எம்.பி.க்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. மேலும் சிலர் வேறு காரணங்களால் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அவர்களுக்கு நாங்கள் இ-மெயில் மூலம் பரிசீலனை பட்டியலை அனுப்பியிருக்கிறோம். இதில் ஏதாவது ஆட்சேபனை இருந்தால் இ-மெயில் மூலம் பதில் கூறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
source maalaimalar