இந்திய நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான 2வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது
வெலிங்டன், பிப்.14-
இந்திய நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான 2வது டெஸ்ட் போட்டி இன்று காலை தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி தலைவர் டோனி நியூசிலாந்து அணியை பேட் செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
கடந்த போட்டியில் விளையாடிய இந்திய அணி இப்போட்டியிலும் எவ்வித மாற்றமும் இன்றி பங்கேற்பதாக டோனி தெரிவித்துள்ளார். நியூசிலாந்து அணியில் ரோஸ் டெய்லர், ஐஷ் ஆகியோருக்கு பதிலாக ஜிம்மி நீஷம் மற்றும் டாம் லாதம் ஆகியோர் பங்கேற்பதாக அந்த அணியின் கேப்டன் மெக்கல்லம் தெரிவித்தார். இப்போட்டியில் நியூசிலாந்து அணி சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லாமலேயே களம் இறங்குகிறது.
தற்போது நியூசிலாந்து தனது முதல் இன்னிங்ஸை துவக்கி விளையாடி வருகிறது.
source maalaimalar