இங்கிலாந்து அணியில் இருந்து கழற்றிவிடப்பட்ட கெவின் பீட்டர்சனை டெல்லி டேர்டெவில்ஸ் அணி ரூ.9 கோடிக்கு ஏலம் எடுத்தது. அவர் அந்த அணியின் நட்சத்திர வீரராக உள்ளார். இந்த நிலையில் டெல்லி கேப்டனாக பீட்டர்சன் விருப்பம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:–
டெல்லி அணியில் முக்கிய பங்கு ஆற்ற விரும்புகிறேன். ஒரு கேப்டனாக இளம் வீரர்கள் அணிக்கு உதவும் ரோலாக இருக்க ஆசைப்படுகிறேன். நாங்கள் வலுவான அணியான இருக்கிறோம். ஒருங்கிணைந்து விளையாட வேண்டும். கேரி கிரிஸ்டன் பயிற்சியின் கீழ் விளையாட ஆர்வமாக உள்ளேன் என்றார்.
source maalaimalar



















