20 ஓவர் உலககோப்பை மீது கவனம்: யுவராஜ் சிங்
ஐ.பி.எல். ஏலத்தில் யுவராஜ்சிங் அதிகபட்சமாக ரூ.14 கோடி ஏலம் எடுக்கப்பட்டார். அவரை பெங்களூர் அணி வாங்கியது.
இதுதொடர்பாக அவர் கூறும்போது:-
பெங்களூர் அணிக்காக விளையாட இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. எனது முழு திறமையை வெளிப்படுத்தக்கூடிய ஒரு இடத்திற்கு செல்வதாக உணர்கிறேன்.
கெய்ல், டிவில்லியர்ஸ் போன்ற சிறந்த வீரர்களுடன் இணைந்து விளையாடுவதை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன். இருப்பினும் தற்போது எனது கவனம் 20 ஓவர் உலக கோப்பை போட்டி மீது தான் உள்ளது
source maalaimalar
