Home
» sports
» ஜான்சன் சூறாவளி பந்துவீச்சுக்கு பணிந்தது தென்னாப்பிரிக்கா: வலுவான நிலையில் ஆஸ்திரேலியா
ஜான்சன் சூறாவளி பந்துவீச்சுக்கு பணிந்தது தென்னாப்பிரிக்கா: வலுவான நிலையில் ஆஸ்திரேலியா
செஞ்சூரியன், பிப். 14-
தென்னாப்பிரிக்கா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 397 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய தென்னாப்பிரிக்கா இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்திருந்தது. டிவில்லியர்ஸ் 52 ரன்களுடனும், பீட்டர்சன் 13 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணியின் பீட்டர்சன் மேற்கொண்டு ரன் ஏதும் சேர்க்காமல் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய பிலாண்டர் 7 ரன்னில் ஆட்டமிழந்தார். சதமடிப்பார் என்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டிவில்லியர்ஸ் 91 ரன்களில் வெளியேறினார். கடைசி விக்கெட்டான மோர்கல் 18 ரன்னில் பெவிலியன் திரும்பினார். இதனால் தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 206 ரன்னில் ஆல் அவுட்டானது.
ஆஸ்திரேலியா தரப்பில் மிரட்டலாக பந்து வீசிய மிட்செல் ஜான்சன் 68 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து 191 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர் ரோகர்ஸ் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் இணைந்த டேவிட் வார்னரும், அறிமுக வீரரான டூலானும் நிலைத்து நின்றதுடன், தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை விளாசித் தள்ளினர்.
அபாரமாக ஆடிய வார்னர் சதம் அடித்தார். 118 பந்துகளில் 13 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் இந்த இலக்கை அவர் எட்டினார். மறுமுனையில் ஆடிக்கொண்டிருந்த டூலானும் அரை சதம் கடந்து ஆடிக்கொண்டிருக்கிறார். இதனால் ஆஸ்திரேலிய அணி வலுவான முன்னிலையில் உள்ளது.
source maalaimalar