ராஸ் டெய்லருக்கு வாழ்வு கொடுத்த டெல்லி அணி
பெங்களூர், பிப். 14–
7–வது ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்களூரில் 2 நாள் நடந்தது. மொத்தம் 154 வீரர்கள் ரூ.262.6 கோடிக்கு ஏலம் போனார்கள். 360 வீரர்கள் ஏலம் போகவில்லை.
நேற்று நடந்த 2–வது நாள் ஏலத்தில் உள்ளூர் வீரர்களுக்கு அதிர்ஷ்ட காற்று அடித்தது. கரண் ஷர்மா (ஐதராபாத்) ரூ.3 கோடிக்கும், ரிஷி தவான் (பஞ்சாப்) ரூ.3 கோடிக்கும், கேதர் ஜாதவ் (டெல்லி) ரூ.2 கோடிக்கும், மனிஷ் பாண்டே (கொல்கத்தா) ரூ.1.70 கோடிக்கும் ஏலம் போனார்கள்.
முதல் நாள் ஏலத்தில் பல வீரர்கள் ஏலம் போகவில்லை. இதில் ராஸ் டெய்லர், ஜெயவர்த்தனே, டேவிட் ஹஸ்சி உள்பட முன்னணி சர்வதேச வீரர்கள் அடங்குவர்.
ஏலம் போகாத வீரர்கள் 2–வது நாளில் மறு ஏலம் விடப்பட்டனர். இதில் நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் டெய்லருக்கு மட்டும் அதிர்ஷ்டம் இருந்தது. அவரை டெல்லி அணி அவரது அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு ஏலம் எடுத்து அவருக்கு மறுவாழ்வு கொடுத்தது.
கட்நத சீசன்களில் ராஸ் டெய்லர் பெங்களூர், ராஜஸ்தான், டெல்லி ஆகிய அணிகளில் விளையாடி இருந்தார். 7–வது ஐ.பி.எல். வீரர்கள் ஏலம் முடிவில் ஒவ்வொரு அணியிலும் இடம் பெற்றுள்ள வீரர்கள் எண்ணிக்கை வருமாறு:–
சென்னை–20, பெங்களூர்–21, கொல்கத்தா–21, பஞ்சாப்–23, டெல்லி–23, ராஜஸ்தான்–25, மும்பை–21, ஐதராபாத்–24
source maalaimalar
