இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கான (ஐ.ஓ.ஏ.) கடந்த ஆண்டு நடந்த நிர்வாகிகள் தேர்தலில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. தேர்தலில் அரசின் குறுக்கீடு இருந்ததால் இந்திய ஒலிம்பிக் சங்கத்தை சஸ்பெண்ட் செய்ய சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி முடிவு செய்தது.
மேலும், காமன்வெல்த் போட்டி ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி சிறை சென்ற லலித் பனோட், பொதுச் செயலாளராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதும் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இதனால், 2012 டிசம்பர் 4-ம்தேதி இந்திய ஒலிம்பிக் சங்கத்தை சஸ்பெண்ட் செய்து ஐ.ஓ.சி. உத்தரவிட்டது. இதனால், தற்போது ரஷ்யாவில் தொடங்கிய குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சர்வதேச ஒலிம்பிக் கொடியை ஏந்திச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் இந்திய ஒலிமபிக் சங்கத்திற்கு சர்வதேச ஒலிம்பிக் சங்கம் வித்த தடை இன்று நீக்கப்பட்டது. இதனால் இந்தியா சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினர் பட்டியலில் இந்தியா சேர்ந்தது.

source maalaimalar