ரித்தி நிறுவனத்தில் பங்குகள்: டோனிக்கு முட்கல் குழு மறைமுக கண்டனம்
புதுடெல்லி, பிப்.11–
ஐ.பி.எல். சூதாட்டம் குறித்து விசாரணை நடத்திய நீதிபதி முட்கல் குழு டோனிக்கு மறைமுகமாக கண்டனம் தெரிவித்து உள்ளது.
இந்திய அணியின் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனுமான டோனி ரித்தி ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் பங்குதாரராக இருந்தார். இந்த நிறுவனத்தை அவரது நண்பர் நடத்தி வருகிறார்.
ரெய்னா, ஜடேஜா, ஓஜா ஆகிய வீரர்களும் அந்த நிறுவனத்தில் இருந்தனர்.
இதுதொடர்பாக எழுந்த சர்ச்சையால் டோனி தனது பங்குகளை அந்த நிறுவனத்திடம் ஒப்படைத்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.
முட்கல் குழு விசாரணையில் இது தொடர்பாக டோனியை மறைமுகமாக சாடியுள்ளது. இந்திய அணிக்காக ஆடும் வீரர்கள் கண்டிப்பாக நிறுவனங்களில் பங்குகளை பெற்று இருக்கக் கூடாது என்று தெரிவித்து உள்ளது.
மேலும் ஐ.பி.எல். அணி உரிமையாளர்களுக்கு சொந்தமான கம்பெனிகளில் ஊழியராக இருப்பதை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளது.
அந்த அறிக்கையில் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை. டோனி ஐ.பி.எல். அணியின் உரிமையாளருக்கு சொந்தமான கம்பெனியில் துணைத் தலைவராக இருக்கிறார்.
சூதாட்டத்தை தடுக்க வீரர்களுடன் அவர்களது ஏஜெண்டுகளை அனுமதிக்க கூடாது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அணி வீரர்களுடனும், அவர்கள் தங்கும் ஓட்டலிலும் வீரர்களின் ஏஜெண்டுகளை அனுமதிப்பது தவறு என்றும் கூறியுள்ளது.
source maalaimalar
