யுவராஜ்சிங்குக்கு கூடுதலாக ரூ.4 கோடி: கொல்கத்தா அணி மீது விஜய்மல்லையா புகார்
ஐ.பி.எல். ஏலத்தில் அதிக விலைக்கு போனவர் யுவராஜ்சிங். யாரும் எதிர் பார்க்காத வகையில் பெங்களூர் ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் அணி அவரை ரூ.14 கோடிக்கு எடுத்தது. அவரை எடுக்க பெங்களூர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையே கடும் போட்டி ஏற்பட்டது.
யுவராஜ்சிங்குக்கு ரூ.4 கோடி கூடுதலாக போனது துரதிருஷ்டவசமானது என்று பெங்களூர் அணியின் உரிமையாளர் விஜய் மல்லையா கூறியுள்ளார். இது தொடர்பாக கொல்கத்தா அணி மீது அவர் ஐ.பி.எல். கவுன்சிலில் புகார் அளித்து இருக்கிறார். யுவராஜ்சிங்கை ரூ.10 கோடிக்கு எடுத்து முடிந்த பிறகு தான் கடைசி நேரத்தில் கொல்கத்தா அணி மீண்டும் விலையை ஏற்றிவிட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
source maalaimalar