Home
» news
» காட்டுமன்னார்கோவில் அருகே அடித்துக்கொல்லப்பட்ட போலீஸ்காரர் பிணத்துடன் கிராம மக்கள் சாலை மறியல்
காட்டுமன்னார்கோவில் அருகே அடித்துக்கொல்லப்பட்ட போலீஸ்காரர் பிணத்துடன் கிராம மக்கள் சாலை மறியல்
காட்டுமன்னார்கோவில், பிப்.11–
காட்டுமன்னார்கோவில் அருகே சென்னிநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ராமையா. இவரது மகன் தெய்வகுமார் (வயது 29). இவர் கடலூரில் ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை தெய்வகுமார் சென்னை–கும்பகோணம் சாலையில் கோவிந்தநல்லூர் பங்களா அருகே தலையில் காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவ்வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து தெய்வகுமாரின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து தெய்வ குமாரின் உறவினர்கள் மற்றும் சென்னிநத்தம் கிராம மக்கள் சம்பவ இடத்துக்கு திரண்டனர். தெய்வகுமாரை யாரோ அடித்து கொலை செய்து விட்டதாக கொதித்து எழுந்தனர். மேலும் தெய்வகுமாரை கொலை செய்தவர்களை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் எனக் கோரி பிணத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் சோழதரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இதனை அவர்கள் ஏற்கவில்லை. தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சேத்தியாதோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ்பாபு சம்பவ இடத்துக்கு வந்தார். தெய்வகுமாரை கொலை செய்தவர்களை கண்டறிந்து கைது செய்வதாக உறுதி அளித்தார். இதனை ஏற்று கிராம மக்கள் மறியலை கைவிட்டனர்.
காலை 6 மணி முதல் 9.30 மணி வரை நடந்த இந்த சாலை மறியல் காரணமாக சென்னை–கும்பகோணம் சாலையில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
இதன்பின்னர் போலீசார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து காதல் தகராறில் தெய்வகுமார் அடித்து கொலை செய்யப்பட்டாரா? அவரை கொலை செய்தவர்கள் யார்? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொலை சம்பவம் காரணமாக சென்னி நத்தம் கிராமத்தில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
source maalaimalar