எனது அரசை கவிழ்க்க நான் முயற்சி செய்யவில்லை: அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி
புதுடெல்லி, பிப்.11-
டெல்லியில் ஜன் லோக்பால் மசோதா நிறைவேறவில்லை என்றால் பதவியை ராஜினாமா செய்வேன் என்று முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று அரவிந்த் கெஜ்ரிவால் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள், பாராளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்பதற்காக நீங்கள் உங்கள் பதவியை தியாகம் செய்ய நினைப்பதாக கூறப்படுகிறதே? என்று கேட்டனர்.
அதற்கு அவர், "அரசை கவிழ்ப்பதற்கு நான் முயற்சி செய்யவில்லை. அந்த கருத்து தவறானது. நான் எனது வேலையை செய்து கொண்டிருக்கிறேன். நாங்கள் இரவு பகலாக மிகவும் கடுமையாக பணியாற்றுகிறோம். நான் எங்களது அரசு பற்றி கவலைப்படவில்லை. இந்த அரசு நாளை கவிழ்ந்துவிடும் என்றால், அது இன்றே கவிழ்ந்து விடலாமே" என்றார்.
காங்கிரஸ் தனது ஆதரவை எப்போது வேண்டுமானாலும் விலக்கிக் கொள்ளும் என்ற எண்ணம் உங்களிடம் உள்ளதா? என்று கேட்டதற்கு, "அது அவர்களது பிரச்சினை. அவர்களுக்கு ஏதாவது பிரச்சினை இருந்தால், ஏன் எங்களை ஆதரித்தார்கள்?" என்றார்.
உங்களது சில நடவடிக்கைகள் காங்கிரசை ஆதரவை வாபஸ் பெறத் தூண்டுவதாக இருக்கிறதே? என்றதற்கு, இல்லை, நான் ஏன் அப்படி செய்யப்போகிறேன். நாங்கள் இதை செய்வோம் என்று முன்கூட்டியே அவர்களுக்கு தெரியும். நாங்கள் முந்தைய காங்கிரஸ் அரசின் ஊழல் கோப்புகளை திறக்க மாட்டோம், அதுபற்றி விசாரணை நடத்த மாட்டோம் என்று அவர்கள் கருதியிருந்தால் அது அவர்களது தவறு. ஏனென்றால் அவர்களுக்கு யாரை ஆதரிக்கிறோம் என்று தெரியவில்லை என்று தான் அர்த்தம்.
எங்களுடன் இணைந்துள்ள அனைவரும் நாட்டுக்காக பணியாற்றுவதற்காகத் தான் வந்தார்களே தவிர, ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக அல்ல. பலரும் தங்கள் தொழிலை விட்டு வந்திருக்கிறார்கள். பெரும்பாலான எனது ஊழியர்கள் அடையாளமாக ஒரு ரூபாய் சம்பளம் தான் பெறுகிறார்கள். எங்கள் நோக்கம் ஆட்சியிலேயே தொடர வேண்டும், ஆம் ஆத்மி கட்சி அதிகார மையமாக வேண்டும் என்பதல்ல. எங்கள் நோக்கத்தை அடைந்த பின்னர் அது வெளியேறிவிடும்.
இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
முன்னதாக நேற்று டெல்லி கவர்னர் நஜீப் ஜங்கை, அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்து பேசினார். அப்போது அவர் ஜன்லோக்பால் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்து அவர் விளக்கியதாக தெரிகிறது.
ஜன்லோக்பால் மசோதாவுக்கு மத்திய அரசிடம் முன் அனுமதி பெறத்தேவை இல்லை என்பதில் அரவிந்த் கெஜ்ரிவால் உறுதியாக இருக் கிறார். இந்த பிரச்சினைக்கு முடிவுகட்ட, மத்திய அரசிடம் முன் அனுமதி பெறவேண்டியது கட்டாயமா? என்பதை உறுதி செய்யும்படி மத்திய சட்ட அமைச்சகத்துக்கு டெல்லி கவர்னர் நஜீப் ஜங் கடிதம் எழுதியிருக்கிறார்.
அப்படி முன் அனுமதி பெற வேண்டியது கட்டாயம் என்பது உறுதியானால் கவர்னர் அலுவலகம் மூலம் முன்மொழியப்பட்ட மசோதா மத்திய அரசுக்கு அனுப்பப்படும் என்று கவர்னர் அலுவலக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஜன்லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவதற்காக டெல்லி சட்டசபை சிறப்பு கூட்டத்தை இந்திரா காந்தி உள் விளையாட்டு அரங்கத்தில் நடத்த அரவிந்த் கெஜ்ரிவால் முடிவு செய்திருந்தார். ஆனால் டெல்லி போலீஸ், கூட்டத்துக்கு வரும் மக்களை அடையாளம் கண்டு ஒழுங்குபடுத்துவது இயலாத காரியம். சட்டசபையின் முன்பகுதியில் கூட்டத்தை கட்டுப்படுத்துவது மிகவும் சிரமம் என்பதால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை கருத்தில் கொண்டு அரவிந்த் கெஜ்ரிவால் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த நிலையில் டெல்லியில் 1984-ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நடந்த வன்முறை தாக்குதல் குறித்து மறுவிசாரணை நடத்த சிறப்பு விசாரணை குழுவை அமைக்க டெல்லி கவர்னர் அனுமதி அளித்துள்ளார். இதன் மூலம் மூடப்பட்ட அனைத்து வழக்குகள், போலீசாரால் சாட்சியங்கள் அழிக்கப்பட்டது போன்ற பல சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று டெல்லி மாநில மந்திரி மணிஷ் சிசோடியா கூறினார்.
கெஜ்ரிவாலின் ராஜினாமா மிரட்டல் குறித்து கருத்து தெரிவித்த பாரதீய ஜனதாவின் ரவிசங்கர் பிரசாத், "அவர் ஊழல் காங்கிரசின் தோள்களில் உட்கார்ந்து கொண்டு ஜன்லோக்பால் மசோதாவை நிறைவேற்ற முயற்சிக்கிறார். அது முடியாது என்று அவர்கள் உணர்ந்ததால் அரசை நடத்த முடியாது என தப்பித்து வெளியேறும் வழியை தேடுகிறார்கள்" என்றார்.
source maalaimalar