புதுடெல்லி, பிப். 14-
மக்களவையில் நேற்று கடும் அமளிக்கிடையே தெலுங்கானா மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீமாந்திரா பகுதியைச் சேர்ந்த ராஜகோபால் எம்.பி., மற்ற உறுப்பினர்கள் மீது மிளகுப் பொடியை தூவினார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத்சிங்கை சந்தித்தார். அப்போது, ஆந்திராவை பிரிப்பதற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
பின்னர் நிருபர்களை சந்தித்த ஜெகன் மோகன் கூறுகையில், “தெலுங்கானா தொடர்பாக நாங்கள் விரிவாக விவாதித்தோம். அப்போது, அவர் (ராஜ்நாத் சிங்) தங்கள் கட்சியின் முத்த தலைவர்களுடன் கலந்துபேசி, விரைவில் முடிவு அறிவிப்பதாக தெரிவித்தார். ஆந்திராவை பிரிக்கும் திட்டத்திற்கு அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவிக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.

source maalaimalar