நரேந்திர மோடியின் தேநீர் பிரச்சாரம்: நிதிஷ்குமார் கடும் விமர்சனம்
பாட்னா, பிப். 14-
பா.ஜ.க பிரதம வேட்பாளர் நரேந்திர மோடியின் டீக்கடை பிரச்சாரம் பற்றி, பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் தெரிவித்துள்ள கருத்து வருமாறு:-
பா.ஜ.க.வின் தேநீர் பிரச்சாரம் என்பது டீ குடித்துவிட்டு புறம்பேசுவது போன்றது. உண்மையில் டீ குடித்துவிட்டு அரட்டை அடிக்கும்போது மிகைப்படுத்தி பேசுவதில் அவர்கள் கைதேர்ந்தவர்கள்.
பீகார் மாநிலத்தில் அரசின் செயல்பாடுகளை பற்றி பொதுமக்கள் கருத்து தெரிவிக்கும் வகையில் “காம் கி கர்சா” என்னும் விவாத திட்டத்தை துவக்கியிருக்கிறோம்.
உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் சமீபகாலமாக பீகார் அடைந்து வரும் முன்னேற்றங்களை பற்றி பேசுகிறார்கள். தலாய்லாமா, பில்கேட்ஸ் போன்ற பிரபலங்கள் மட்டுமின்றி பிரிட்டிஷ், ஐரோப்பிய நாடுகளின் முக்கிய பிரமுகர்களும் பீகாரை பாராட்டி வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நிதிஷ்குமாரின் கருத்து பற்றி பிகார் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் நந்த கிஷோர் கூறும்போது, “முதல் மந்திரியின் எதிர்மறையான கருத்து மோடி மீதுள்ள வெறுப்பையும், பயத்தையும் காட்டுகிறது“ என்று கூறியுள்ளார்.
source maalaimalar