புதுடெல்லி, பிப். 14-
புதுடெல்லியில் கடந்த மாதம் 30ம் தேதி அருணாச்சல பிரதேச மாணவர் நிடோ தனியா கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவர் மீது இனவெறித் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறி அருணாச்சல பிரதேச மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோன்று வடகிழக்கு மாநிலத்தவர்கள் தொடர்ந்து இனவெறி தாக்குதலுக்கு ஆளாகி வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இச்சம்பவத்தையடுத்து வடகிழக்கு மாநில மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், நிடோவின் பெற்றோர் இன்று டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தனர். அப்போது, கொலையாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றும், தங்கள் மகனது நினைவு நாளை தேசிய இனவெறி எதிர்ப்பு நாளாக அறிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர். அவர்களின் கோரிக்கையை பரிசீலிப்பதாக பிரதமர் உறுதி அளித்தார்.
இச்சந்திப்பிற்கு பின்னர் பேசிய பிரதமர் மன்மோகன் சிங் கூறுகையில் “இது நம் நாட்டை மிகவும் வெட்கப்படவைக்கும் செயலாகும். குற்றவாளிகளுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்படும். வடகிழக்கு பகுதிகளிலிருந்து வரும் மாணவர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படும். இதுபோன்ற துயரமான சம்பவம் நடக்க விடாமல் உறுதி செய்வது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்” என்று தெரிவித்தார்.

source maalaimalar