டெல்லி சட்டசபையில் கடும் அமளி: அரவிந்த் கெஜ்ரிவாலின் 'மைக்' உடைப்பு
புதுடெல்லி, பிப்.14-
டெல்லி சட்டசபையின் விசேஷ கூட்டத்தொடரின் முதல் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது, நள்ளிரவு சோதனையில் ஆப்பிரிக்க பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாக சர்ச்சையில் சிக்கிய சட்ட மந்திரி சோம்நாத் பாரதி பதவி விலக வேண்டும் என்று காங்கிரசும், பா.ஜனதாவும் கூட்டாக வற்புறுத்தி அமளியில் ஈடுபட்டன.
பா.ஜனதா எம்.எல்.ஏ. ஆர்.பி.சிங், காகிதங்களை கிழித்து சோம்நாத் பாரதி மீது வீசி எறிந்தார். வளையல்களையும், லிப்ஸ்டிக்கையும் பாரதி முன்பு வைத்தார். முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் மைக்கை காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஆசிப் முகமது கான் உடைத்தார். சபாநாயகர் எம்.எஸ்.திர் கையில் இருந்த கோப்புகளை அவர் கிழித்தார். சில பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் தனது மைக்கை பயன்படுத்த முடியாதவாறு அவரது கையை பிடித்துக்கொண்டனர். நிறைய மைக்குகளை இரு கட்சியினரும் உடைத்தனர். சோம்நாத் பாரதியை தரக்குறைவாக பேசினர்.
இந்த அமளியால் சபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. பிறகு நிருபர்களிடம் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ்-பா.ஜனதாவின் கூட்டு அம்பலமாகி விட்டதாக தெரிவித்தார்.
source maalaimalar