Home
» politics
» டெல்லி மாநில சட்ட மந்திரி சோம்நாத் பாரதியை நீக்க வேண்டும்: ஜனாதிபதியிடம் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் மனு
டெல்லி மாநில சட்ட மந்திரி சோம்நாத் பாரதியை நீக்க வேண்டும்: ஜனாதிபதியிடம் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் மனு
புதுடெல்லி, பிப்.11-
டெல்லி மாநில பாரதீய ஜனதா கட்சி எம்.எல்.ஏ.க்கள் அதன் தலைவர் ஹர்ஷவர்தன் தலைமையில் நேற்று ஜனாதிபதி பிரணாப்முகர்ஜியை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அதில், 'ஆம் ஆத்மி கட்சி அரசின் சட்ட மந்திரி சோம்நாத் பாரதி மீது 15 புகார்கள் கூறப்பட்டு இருந்தது.
டெல்லியில் ஆப்பிரிக்க மக்கள் வசிக்கும் பகுதிக்கு சென்று சோதனை என்ற பெயரில் பெண்களிடம் அத்துமீறி நடந்து கெண்டது, அரசியல் சாசனங்களை மதிக்காமல் பொது இடத்தில் சட்டசபை கூட்டத்தை கூட்டி ஜன்லோக்பால் மசோதாவை சட்டமாக்கப்போவதாக அறிவித்தது, நன்கொடை வசூலித்தது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி, அதற்கு பொறுப்பு ஏற்று சட்டமந்திரி சோம்நாத் பாரதியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தங்களின் மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி உறுதி அளித்ததாக ஹர்ஷவர்தன் நிருபர்களிடம் தெரிவித்தார்.
source maalaimalar