ஏர் இந்திய நிறுவன சர்வதேச விமானங்களில் முதல் வகுப்பு நீக்கம்
புதுடெல்லி, பிப்.11-
அரசு விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா கடந்த ஏழு ஆண்டுகளாகவே பல்வேறு இழப்புகளை சந்தித்து வருகிறது. விமான எரிபொருள் விலை உயர்வு, நிர்வாக முறையில் குறைபாடு, 15 பில்லியன் டாலர் கடன் சுமை போன்ற காரணங்களால் தத்தளித்து வரும் ஏர் இந்தியா நிறுவனம் சென்ற நிதியாண்டில் மட்டும் ரூ.3,900 கோடியை இழந்துள்ளது.
தற்போது இழப்புகளை குறைக்கும் வகையில் பழைய விமானங்களுக்கு பதிலாக புதிய விமானங்களை சேர்த்தல் போன்ற செலவுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் ஏர் இந்தியா களமிறங்கியுள்ளது.
இந்நிலையில், தற்போது அமெரிக்காவின் நியூயார்க், சிகாகோ போன்ற நகரங்களுக்கும், சிங்கப்பூருக்கும் இயக்கி வரும் போயிங் 777 ரக சர்வதேச விமானங்களில் நான்கு முதல் தர வகுப்பில் நான்கு இருக்கைகள் உண்டு. இதில் சராசரியாக ஒருவரே பயணம் செய்வதால் ஒவ்வொரு விமானங்களிலும் மீதமுள்ள 3 இருக்கைகள் காலியாக உள்ளது. அதனால் 12 சர்வதேச விமானங்களில் தனது முதல் தர வகுப்புகளை ரத்து செய்துள்ளது.
இதுகுறித்து விமானத்துறை வல்லுனர்கள் கூறும்போது :-
“பயணம் செய்யும் அரசு அதிகாரிகளுக்கு அதிக இலவச சலுகைகளை வழங்குவதே ஏர் இந்தியாவின் வீழ்ச்சிக்கு காரணம். சில ஆண்டுகளுக்கு முன் அரசு அதிகாரிகள் பொதுத்துறை விமானப்போக்குவரத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. ஆனால் இன்று கட்டணம் அதிகமாக உள்ளதாலும், போதுமான வசதிகள் இல்லாததாலும் இந்த முதல் தர வகுப்பில் அதிகம் பயணம் செய்துவந்த அரசு அதிகாரிகள் தனியார் விமானங்களை அதிகமாக பயன்படுத்தும் நிலை உருவாகியுள்ளது” என்று தெரிவித்தார்.
source maalaimalar