சபைக்குள் நான் கத்தி கொண்டு வரவில்லை: தெலுங்குதேச எம்.பி. மறுப்பு
புதுடெல்லி, பிப்.14-
தெலுங்கானா மசோதா நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட போது சபையில் கடும் அமளி ஏற்பட்டது. அப்போது, தெலுங்கு தேச எம்.பி. வேணுகோபால் ரெட்டி கையில் கத்தி வைத்திருந்ததாக பரபரப்பான தகவல் வெளியானது.
ஆனால் பின்னர் இதை அவர் மறுத்தார். "சபைக்குள் நான் கத்தி கொண்டு வந்ததாக அரசு தவறான தகவலை பரப்புகிறது. ஆனால் நான் கத்தி எதையும் கொண்டு வரவில்லை" என்று அவர் கூறினார். "பாராளுமன்ற பொதுச்செயலாளர் முன்பு இருந்த மைக்கை பிடுங்கி நான் கையில் வைத்து இருந்தேன். அது கத்தி போல் தெரிந்து இருக்கலாம். ஆனால் மந்திரிகள் சுஷில்குமார் ஷிண்டேயும், கமல்நாத்தும் என் மீது தவறாக குற்றம் சாட்டுகிறார்கள்" என்றும் வேணுகோபால் ரெட்டி கூறினார்.
அமளியின் போது, காங்கிரஸ் எம்.பி.க்கள் சுமார் 10 பேர் தன்னை சூழ்ந்து கொண்டு தாக்கியதாகவும், அவர்கள் தன்னை தீர்த்துக்கட்ட விரும்பியதாகவும், பாராளுமன்ற வரலாற்றில் இது ஒரு கறுப்பு நாள் என்றும் அப்போது வேணுகோபால் ரெட்டி தெரிவித்தார்.
source maalaimalar