தெலுங்கானா விவகாரத்தால் பாராளுமன்றத்தில் கலகம்: பிரதமர் மன்மோகன்சிங் அவசர ஆலோசனை
புதுடெல்லி, பிப்.13-
பாராளுமன்றத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தெலுங்கானா மசோதாவை மத்திய அரசு இன்று தாக்கல் செய்தது. அப்போது காங்கிரஸ் எம்.பி. ராஜகோபால் தான் சபைக்கு எடுத்து வந்திருந்த மிளகுப்பொடி நிரப்பிய கேனை எடுத்து, சக உறுப்பினர்கள் மீது மிளகுப்பொடியைத்தூவி தாக்குதல் நடத்தினார். இதில் பலரும் பாதிப்புக்குள்ளானார்கள்.
பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு பெரும் தலைக்குனிவை ஏற்படுத்திய இந்த சம்பவத்தால், சபை நடவடிக்கைகள் பெரிதும் பாதித்தது.
இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங் அவசர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி கமல்நாத், சட்ட மந்திரி கபில்சிபல், பாராளுமன்ற சபாநாயகர் மீரா குமார் கலந்து கொண்டனர்.
அவையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட காங்கிரஸ் எம்.பி. ராஜகோபால் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
பாராளுமன்ற நிகழ்வுகள் குறித்து பிரதமர் மன்மோகன்சிங்கை ஐக்கிய ஜனதாதளம் கட்சித்தலைவர் சரத்யாதவ் உள்ளிட்ட பல்வேறு கட்சித்தலைவர்களும், காங்கிரஸ் எம்.பி.க்களும்கூட சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இத்தகைய சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காதவண்ணம், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் பிரதமர் மன்மோகன்சிங்கிடம் வலியுறுத்தினர்.
source maalaimalar