Home
» politics
» குஜராத்தில் சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து முன்னாள் முதல்வர் கேசுபாய் படேல் விலகல்
குஜராத்தில் சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து முன்னாள் முதல்வர் கேசுபாய் படேல் விலகல்
அகமதாபாத், பிப்.14-
குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரான கேசுபாய் படேல் நேற்று தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.
உடல்நலக்குறைவு காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணத்திலேயே படேல் இவ்வாறு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. சபாநாயகர் வஜுபாய் வாலாவிடம் தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துவிட்டதாக செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
விசாவதார் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் தனது உடல்நிலை காரணமாக அத்தொகுதி மக்களுக்கு எந்த வித உதவிகளையும் செய்ய இயலாத காரணத்தால் தனது பதவியை ராஜினாமா செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.
அவரது குஜராத் பரிவர்த்தன் கட்சி, தேசிய அரசியலில் ஈடுபட்டு வரும் கட்சிளுடன் இணைய(காங்கிரஸ் தவிர்த்து) வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்தார். முன்னதாக குஜராத் மாநிலத்தின் மேலிட பார்வையாளரான ஓம் மாத்தூர் நேற்று காலை தான் படேலை சந்தித்து பா.ஜ.கட்சியில் இணையுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
source maalaimalar