பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஜகா அஷ்ரப் நீக்கம்
லாகூர், பிப். 11–
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தலைவர் ஜகா அஷ்ரப்பை, அந்த நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரிப் அதிரடியாக நீக்கியுள்ளார். கிரிக்கெட் வாரிய பணிகளை கவனிக்க 11 பேர் கொண்ட இடைக்கால கமிட்டியையும் அமைத்து உத்தரவிட்டுள்ளார்.
ஐ.சி.சி அமைப்பில் இந்தியா உள்பட மூன்று நாடுகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் நிர்வாக சீர்திருத்த சட்டம் மீதான ஓட்டெடுப்பில் பாகிஸ்தான் கலந்து கொள்ளவில்லை. இந்த விவகாரத்தை சரியான வழியில் கையாள வில்லை என்ற புகாரின் அடிப்படையில் ஜகா அஷ்ரப் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
source maalaimalar
