Home
» news
» ஊழல் ஜனநாயகத்தை அரித்து தின்னும் புற்றுநோயாக இருக்கிறது: குடியரசுதின உரையில் ஜனாதிபதி பேச்சு
ஊழல் ஜனநாயகத்தை அரித்து தின்னும் புற்றுநோயாக இருக்கிறது: குடியரசுதின உரையில் ஜனாதிபதி பேச்சு
புதுடெல்லி, ஜன. 26-
நாட்டின் 65-வது குடியரசு தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று மாலை நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஊழல், ஜனநாயகத்தை அரித்து தின்னும் புற்றுநோயாக இருக்கிறது. தேர்தல், மக்களிடையே மாய தோற்றத்தை ஏற்படுத்துவதற்கான அனுமதியை வழங்கியிருக்கவில்லை. நாட்டு மக்களின் வாக்கை பெற விரும்புகிறவர்கள், அரசால் என்ன செய்யமுடியுமோ அதை மட்டுமே வாக்குறுதியாக அளிக்க வேண்டும். அரசு ஒரு தொண்டு செய்யும் கடையல்ல.
ஜனரஞ்சக அராஜகம், அரசுக்கான ஒரு மாற்றாக இருக்கமுடியாது. இளைஞர்களுக்கு வாய்ப்பு அளியுங்கள். அவர்கள் உருவாக்குகிற இந்தியாவை பார்த்து நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். உறுதியற்ற அரசாங்கம் எப்பொழுதும் மகிழ்ச்சியற்றதாகவே இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
வீதியில் போராட்டம் நடத்திய டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை சாடும் வகையில் ஜனாதிபதி உரை அமைந்துள்ளது என்று கூறப்படுகிறது.
source maalaimalar