தே.மு.தி.க. விருப்ப மனு: 4–வது நாளாக விஜயகாந்த் நேர்காணல்
கோயம்பேடு, பிப்.12–
பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களிடம் விஜயகாந்த் தலைமையில் 9–ந்தேதி முதல் நேர்காணல் நடந்து வருகிறது.
கடந்த 3 நாட்களில் 30 தொகுதிகளுக்கு நேர்காணல் நடந்தது. இன்று மீதம் உள்ள வேலூர், ஆரணி, அரக்கோணம், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சீபுரம், திருவள்ளூர், வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னை, புதுச்சேரி ஆகிய 10 தொகுதிகளில் போட்டியிட விரும்பும் தே.மு.தி.க. வினரிடம் நேர் காணல் நடந்தது.
source maalaimalar
