எவரெஸ்ட் சிகரத்தில் மலையேறும் கட்டணத்தை குறைத்த நேபாள அரசு
காத்மாண்டு, பிப்.14-
ஒவ்வொரு வருடமும் மார்ச் முதல் மே வரையிலான மூன்று மாதங்களும் உலகின் மிக உயர்ந்த சிகரமான மவுண்ட் எவரெஸ்டில் மலையேறும் சீசனாக உள்ளது. இந்த மூன்று மாதங்களில் வெளிநாடுகளிலிருந்து வரும் மலையேறும் வீரர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவர்கள் சுமார் 29 ஆயிரம் அடி உயரமுள்ள எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்கு ஆயிரக்கணக்கான டாலர்களை கட்டணமாக செலுத்துகின்றனர்.
தற்போதைய விதிமுறைகளின்படி, நேபால் அரசு தனியாக மலையேறுவதற்கு 25 ஆயிரம் டாலரையும், 7 பேர் கொண்ட குழுவாக மலையேறுவதற்கு 70 ஆயிரம் டாலர்களையும் கட்டணமாக வசூலித்து வருகிறது.
இந்நிலையில் சுற்றுலாத்துறை அதிகாரி திலக்ராம் பாண்டே தனியாக மலையேறுவதற்கான கட்டணத்தை 25 ஆயிரத்திலிருந்து 11 ஆயிரமாக குறைப்பதாக தெரிவித்துள்ளார். சலுகை கட்டணத்தை பெற செயற்கையாக 7 பேர் சேர்ந்து குழுவாகின்றனர். இதுபோன்ற குழுக்களில் வீரர்களை வழிநடத்திச் செல்லும் குழுத்தலைவருக்கு தன் குழுவிலுள்ள வீரர்களையே யாரென்று தெரிவதில்லை.
இதுபோல பொழுதுபோக்கிற்காக மலையேறுபவர்களை தடுக்கவும், உண்மையாகவும் பொறுப்புணர்வோடு சாதனை படைப்பதற்காக மலையேறுபவர்களை ஊக்குவிக்கவும் நேபால் அரசு கட்டணத்தை குறைத்துள்ளது.
1953-ல் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து உலக சாதனை படைத்த எட்மண்ட் ஹிலாரி சென்ற பாதைகளில் இந்த புதிய கட்டணம் அமல்படுத்தப்படுகிறது. சீசன் இல்லாத மற்ற மாதங்களில் 2,500 டாலர்கள் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
உலகின் உயர்ந்த 14 மலைச்சிகரங்கள் நேபாலில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
source maalaimalar