புதுடெல்லி, பிப்.12–
மத்திய விவசாயத்துறை மந்திரி சரத்பவாரை தி.மு.க. பாராளுமன்ற கட்சித் தலைவர் டி.ஆர்.பாலு சந்தித்தார். அப்போது அவரிடம் ஒரு மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:–
தமிழ்நாட்டில் திருவாரூர், திண்டுக்கல், தேனி, நெல்லை, கோவை, திருப்பூர், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, சேலம், மதுரை, ஈரோடு, புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் நோய் தாக்குதல் காரணமாக ஆயிரக் கணக்கான தென்னை மரங்கள் பட்டுப்போய் விட்டன.
இதனால் ஏழை விவசாயிகள் பெருமளவில் பாதிப்பு அடைந்துள்ளனர். எனவே பட்டுப்போன தென்னை மரம் ஒன்றுக்கு தலா ரூ.20 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும். தென்னை மரங்களை தாக்கும் நோய்களை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டெல்டா மாவட்டங்களில் அரசு நெல் கொள்முதல் நிலையங்களை அறுவடை காலத்தில் திறக்க வேண்டும். பயிர் இன்சூரன்ஸ் குறித்து அரசு விழிப்புணர்வு முகாம் நடத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
source maalaimalar
